முக்கியமான சர்வதேச நாள்களில் அவற்றுக்குத் தொடர்புடைய சிறப்புச் சித்திரங்களை Google தேடுபொறி வழங்குவது வழமை. இதுவே Google Doodle என்று அழைக்கப்படுகிறது.
அதைக் கிளிக் செய்யும்போது, அந்த நாளைப் பற்றிய பல தகவல்களை அறியலாம்.
இன்று மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். இந்தத் தினத்தை சிறப்பிக்கும் வகையில் Google தேடுபொறி, விசேட Google Doodle சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
இந்த Google Doodle ஐ வடிவமைத்தவர் அலிசா வினன்ஸ் (Alyssa Winans).
“ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையையும், அவர் பெறும் அனைத்து அனுபவங்களையும் பிரதிபலிக்க ஒரு சித்திரம் போதாது. ஆனாலும், முடிந்தளவுக்கு விரிவான கண்ணோட்டத்துடன், பெண்மையைப் பிரதிபலிக்க முயன்றேன்” என வடிவமைப்பாளர் அலிசா வினன்ஸ் தெரிவித்துள்ளார்.
சித்திரத்தின் கருப்பொருள் : “பெண்களை ஆதரிக்கும் பெண்கள்”
சித்திரத்தில் காணப்படும் அம்சங்கள் :
- மேடையில் பேசும் பெண்; பேச்சைக் கேட்கும் 2 பெண்கள்
- இரவில் நட்சத்திரத்தை கொண்டு வழிதேடும் பெண்கள்
- வயதான பெண்ணுக்கு நடக்க உதவும் இளம்பெண்
- தாய்ப்பால் ஊட்டும் தாய்; பால்புட்டியில் பால் அளிக்கும் இன்னுமொரு தாய்
- ஆர்ப்பாட்டத்தில் முக்காடு அணிந்திருக்கும் பெண்ணுக்குப் பக்கத்தில் 2 வேறு இனத்துப் பெண்கள்
- ஒரு பெண்ணுக்கு சிகிச்சை வழங்கும் பெண் மருத்துவர்
இவ்வாறு வேறுபட்ட சூழல்களில் இருக்கும் பெண்கள், அவர்கள் தனியாக இல்லாமல் மற்ற பெண்களுடன் இணைந்திருக்கும் காட்சிகளை இன்றைய Google Doodle சித்திரிக்கிறது.