அரிசி நீர் பழமையான காலத்தில் இருந்தே பல கலாச்சாரத்தை கொண்ட மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அரிசியை 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி பயன்படுத்தலாம் அல்லது அரிசி வேகவைத்த நீரையும் பயன்படுத்தலாம். அரிசியை கைகளால் நன்றாக அழுத்தி கழுவ வேண்டும். இதனால் கைகளில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், அரிசி நீருடன் வினை புரிந்து ‘நொதித்தல்’ முறையில் கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.
தேவையான அளவு பயன்படுத்திய பின்னர், மீதமுள்ள அரிசி நீரை காற்று புகாத போத்தலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கலாம். இதை ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
தலை முடி: தலைக்கு ஷெம்பூ பயன்படுத்தி குளித்தபின்பு, அரிசி நீரில் கூந்தலை அலச வேண்டும். பிறகு, 15 நிமிடங்கள் வேர் முதல் நுனி வரை மென்மையாக தலையில் மசாஜ் செய்து, சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனால் முடிக்கு வலிமையும், இயற்கையான பொலிவும், நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும்.
முடி உதிர்வு கட்டுப்படும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.