செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன?

குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன?

1 minutes read

2 வயது குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் என்னென்ன? என்பதை தற்போது பார்ப்போம்.

* பருப்பு உணவுகள் – தினமும் பருப்பு உணவுகளை கொடுத்தால், குழந்தையின் உடலில் புரத அளவு சரியாக இருக்கும். பாசிப் பருப்பு சிறந்த தேர்வாகும்.

* ஆரோக்கியமான எண்ணெய்கள் – ஆளிவிதை, அக்ரூட், சோயா பீன்ஸ், மற்றும் பிற நட்ஸ் வகைகள் உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களை வழங்கும்.

* பால் பொருட்கள் – பால், தயிர், பன்னீர் ஆகியவை கால்சியம் நிறைந்தவை. லாக்டோஸ் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு மாற்றாக கால்சியம் சப்ளிமெண்ட் வழங்கலாம்.

* வாழைப்பழம் – மெக்னீசியம், பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கும் தசை வலிமைக்கும் உதவும்.

* கேரட் & கீரை – வைட்டமின் ஏ நிறைந்ததால் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

* கோழி & அசைவம் – இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.

* சிட்ரஸ் பழங்கள் – எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை வைட்டமின் C நிறைந்தவை. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

* மீன் – அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* வைட்டமின்-டி – சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின்-டி குழந்தைகளின் எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு முக்கியம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More