பல தமிழ் பெற்றோருக்கு
மருத்துவம் மட்டுமே
படிப்பாக தெரிகிறது
அதுக்கென்ன
படிப்பது நல்லதுதான்
என்ன தான்
இருந்தாலும்
சும்மாவா
மருத்துவ படிப்பும்
ஆழமா அறிவோட
படித்தால் தானே
அங்கும் நுழைய முடியும்
எத்தனை தமிழன்
மருத்துவர் என்று
எங்களுக்கு
பெருமை தானே
ஆனால் மருத்துவம்
மட்டும் படித்தால் போதுமா
கழுவவும் துடைக்கவும்
தேடவும் தெரியவும்
ஆடவும் பாடவும்
அறிவோடு எழுதவும்
அரசியல் பொருளியல்
உளவியல் உயிரியல்
சட்டம் சமூகவியல்
சர்வதேச அரசியல்
தத்துவம் என்றும்
இலக்கியம் கலை
கவிஞன் என்று
எழுதவும் பேசவும்
உந்தன் உரிமையை வெல்லவும்
புவியியல் அரசியல்
பூகோளத்திற்காய் என்றும்
எத்தனை பேர் தேவை
ஆதலால்
இந்தப் படிப்புகளும்
சும்மாவா
புலம் பெயர்ந்து வந்தாலும்
பிள்ளையின் படிப்புக்காகவும்
உறவுகளின் பசிக்காகவும்
உரிமைக் குரலுக்காகவும்
விடிய விடிய
வியர்வை சிந்தி
குளிரிலும் பனியிலும்
கொடுத்தானே வாழ்வை
அவன் கூட சும்மாவா
வந்தாலும் வந்தான்
அகதியாய் வந்தாலும்
ஆழமாய் புதைத்தாலும்
அந்த விதை போலவே
சட்டென்று முளைத்து
பட்டென்று நிமிர
டக்கென்று தெரியுதே என்று
ஐயோ ஐரோப்பியருக்கும்
அதிசயம் தானம்
ஆதலால்
அனைத்தையும் படிபோம்
ஆயுதம் செய்வோம்
அறிவைத் தேடுவோம்.
பா.உதயன்