1
அவர்கள் கடலை விழுங்கச் செல்கிறார்கள்
ஆயினும் என்ன அவர்களையும்
வேட்டையாடுவோம்
அவர்களுக்குத் தெரியாது
கடலின் தலைகீழ் ஆணிவேர் மலைகள்
அவர்கள் தேசத்தை விற்கிறார்கள்
ஆயினும் என்ன உழுதுண்டு வாழ்வோர் போராடுவோம்
அவர்களுக்குத் தெரியாது
ஏர் கொண்டும் எழுதுவோம் என்று
இறக்கமற்ற வார்த்தைகளால் அநீதி செய்கிறார்கள்
ஆயினும் என்ன நிலத்தின் சொற்களால் முழங்குவோம்
நெல்லைக் கண்டறிந்தவன் நாவில்
ஊறிய ஆதிப் பசி தான்
விளைநிலம்
•
தேன்மொழிதாஸ்
29.1.2021
07: 53am
முருகியம்