செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வருக வசந்தமே | பா.உதயன்

வருக வசந்தமே | பா.உதயன்

2 minutes read
 
வானத்தில் வண்ணமாய்
பூக்கள் பூக்குது
வாசலை திறந்து வந்து
காலை புலருது
காலை புலர்ந்ததென்று
யார் சொன்னது
காற்றினில் கீதம் ஒன்று
கனவில் சொன்னது
மீட்டிடும் கைகளினால்
வீணை பாடுது
விடியுதோர் காலம் என்று
கீதம் கேக்குது
ஆலய மணி ஓசை
காதில் கேக்குது
அன்பே சிவம் என்று
சொல்லி கேக்குது
ஆனந்த யாழினிலே
ராகம் கேக்குது
அழகிய கதிரவன்
கண்ணைத் திறக்கிறான்
ஆயிரம் பூக்களின்
அழகு சிரிக்குது
காலைப் பறவைகள்
பாடல் இசைக்குது
எந்தன் மன அறைக்குள்
இருந்து ஒரு மணி ஓசை கேக்குது
மௌனமாக கனவு வந்து
கவிதை பாடுது
கனவுகள் உயிர்த்தொரு
காலம் பிறக்குது
காலைப் பொழுதொன்று
மெல்ல விடியுது.
பா.உதயன்
May be an image of 1 person, sky and text that says 'வருக வசந்தமே- காலை புலரும் நேரம் கண்ணில் பூக்கள் பூக்கும் தருணம்- பா.உதயன்'

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More