செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அரங்கம் நிறைந்த மக்கள் வருகையுடன் வில்வரசனின் ‘பசி உறு நிலம்’ கவிதை நூல் வெளியீடு

அரங்கம் நிறைந்த மக்கள் வருகையுடன் வில்வரசனின் ‘பசி உறு நிலம்’ கவிதை நூல் வெளியீடு

4 minutes read

பேராதனை பல்கலைக்கழக மாணவன் ச. வில்வரசனின் “பசி உறு நிலம்” கவிதை நூல் அறிமுக நிகழ்வு கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் கடந்த 14.5.2023 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வினை சிரேஷ்ட ஊடகவியலாளர் ( ibc தமிழ் ) க.உசாந்தன் அவர்கள் தொகுத்து வழங்க நிகழ்வினை துனுக்காய் கல்வி வலய தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகர் சு.லோகேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் யாழ்- கிளி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு நூலினை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

தொடர்ந்து மகா மகாதேவா சுவாமிகள் சைவ சிறுவர் இல்ல தலைவர் திரு. மோகனபவன் அவர்களும் திருவையாறு மகா வித்தியாலய அதிபர் திரு. கி விக்கினராஜா அவர்களும் கிளி வடக்கு வலய தமிழ் ஆசிரிய ஆலோசகர் திருமதி ஞா.கலைச்செல்விஅவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

நூலிற்கான விமர்சன உரையை “பயங்கரவாதி” நூலின் ஆசிரியர் கவிஞர் தீபச்செல்வன் நிகழ்த்தியிருந்தார் தொடர்ந்து நூலாசிரியர் வில்வரசனின் ஏற்புரையுடன் நூல் அறிமுக நிகழ்வு முடிவு பெற்றது.

நிகழ்விற்கு கவிஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் , மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இன விடுதலைக்காக போராடுகின்ற ஓர் இனக்குழுமத்தின் எழுத்தாக்க சிந்தனையில் இளைய தலைமுறையினரின் எழுத்தாக்க புதிய வரவுகள் மகிழ்ச்சி அழிக்கின்றது கட்டமைக்கப்பட்ட இனக்குழுமத்தின் எழுத்தாக்கம் சிந்தனைகள் துன்பிக்கப்பட்ட தமிழர் வாழ்வியலை வெளிப்படையாக பேசும் ஒன்றாகும் இளைய தலைமுறையின் ஏக்கம் பரிதவிப்பு வாழ்வியல் கோலங்கள் என்பனவற்றை வெளிப்படுத்தியுள்ளார் தம்பி வில்வரசன் வாழ்த்துக்கள்….

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More