காலம் பிறப்பித்த கருவொன்று
களம் காண துணை நின்றாற் போல்
சீறும் கணைகளும் கரை கண்டிடவே
புலி பெயர் புனைந்த பெருமறவர் கூட்டம்
திக்கு திசையறியா சேனையன் படை முறித்து
பேர்கொண்டெழும் எம் அணையான்
காலம் கொடுத்த களம் வென்றிடவே
திசையெட்டும் பறை முழங்கிட
சூரரை போற்றி நின்றான் அவன்
தாய் மண் மீளும் என பகைமுடித்து
எம்மவன் தோள் சாய்வான்
அனல் பறக்கும் காட்டினில் சிசுவை
சுமந்த தாய்போல் நம்மவர் ஏற்றிய
செந்தணல் சுடுகலன் சொல்லும்
செங்கனல் கரிகாலன் பெற்ற
பிள்ளையென
அடவி அதிரும் அவன் போக்கில் ஊடே
செங்கனல் குடிக்கும் வல்நெஞ்சன்
உயிரும்
பிறவாளன் பிதற்றும் கொச்சை தமிழும்
சொல்லவா வேண்டும் பச்சைத்தமிழன்
புகழை
ஓர் அறிவாளன் அறிவான்
எம்துணை நின்ற படைகளின்
உணர்வை
கேசுதன்