உலகத்தரம் வாய்ந்த “பயங்கரவாதி” நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றது. அண்மைய நாட்களில் உலகெங்கும் பல நாடுகளில் பயங்கரவாதி நாவல் அறிமுகமாகிறது.
லண்டனில் மக்களின் பேராதரவுடன் பயங்கரவாதி நாவல் அறிமுக விழா இடம்பெற்ற நிலையில் வரும் மாதம் 22ஆம் திகதி பிரான்ஸில் அறிமுக நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து ஜூலை 30ஆம் திகதி கனடாவில் தமிழ் தாய் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான முறையில் பயங்கரவாதி நாவலின் அறிமுகவிழா இடம்பெறுகின்றது.
அனைத்து உறவுகளும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு பேரன்புடன் வேண்டுகிறோம்.