அரசியல் எனும் புத்தகம் காகிதங்களாய் பறந்தபடி
தேர்தல் காலத்தோடு ஓட்டப்படும்
வண்ணங்களாய் வாக்களித்துவரும்
தரகர் கூட்டம்
மேலோட்ட பார்வையில் பாதைகளும்
சிலகாலம் மின்னும் வாக்குகள் வழங்குங்கள்
ஏமாந்த கோமாளிகள் நாங்களும்
கண்கட்டி பொம்மைகளாய் வேடிக்கை பார்த்து
எதிர்காலத்தை சூனியமாக்கி விலைபோகும்
அரசியல் தலைகளை வளர்த்திடுவோம்
வஞ்சகன் மனமறியாது வந்தவுடன்
காட்டிடுவான் அவன் வேலை
நேர்மை அரசியல் என்று வாக்குகள் செலுத்தி
கைகாட்டி பொம்மைகளை ஆடவர் கூட்டமும்
அவன் பின்னே செல்லும்
சுதந்திர காற்றை சுவாசிக்க எமக்கொருவன் வருவான்
என்று வருவோன் போவோனுக்கு வாக்களித்து
நடைப்பிணமாய் தெருவோரம் கிடப்போம்
நடிகர் கூட்டங்களின் நாடக அரங்கேற்றம்
வீதி வீதியாய் கற்பனை கதைகளும்
கட்டுக்கதைகளும் சொல்லி கோமாளி
மூடர் கூட்டம் நாம் என பட்டயம்
எழுதுவான்
கல்வி அறிவோடு வேலைவாய்ப்பு தேடும் அறிவான் மத்தியில் காசுக்காய் விலைபோகும் அரசியல்வாதிகளும் காடையர் சிலரை பட்டதாரியாக்கி பார்த்து ரசிப்பான்
பட்டம் படித்தவன் பார்த்து சிரிப்பான்
அமைதியிலும் அர்த்தமுற்று அலையும் சமூகம்
எல்லோரும் அவர்களாகிட எவர்தான் நேர்மையாளன்
என்று ஊகத்துடன் வாழ்க்கை சுழற்சியாய்
போராளிகளும் ஏமாளிகளாய் இன புரட்ச்சியாளன்
உணர்ச்சியற்றவனாய் பகைவன் முன் பயமறிந்து
நின்றால் தகுதியற்றவனை தலைவனாக்கி
தவிக்கிறது நாடு
கேசுதன்