என்று தணியும் இந்த தாகம் வன்னி தேசம் விடியலெனும் தாகம் தீர்க
தூங்கி கொண்டிருந்தோரை
தூக்கி வாய்க்குள் போட்டுவிட்டதே
இந்த தாகம்
கொழுந்துவிட்டெரிந்த நெருப்பிற்குள்
தீக்கிரையாய் போனதே நம் தேசத்தின் பாகம்
தேசம் காக்க தம் உயிர் நீத்த உயிர்களின்
வீரம் பேச தைரியம் வேண்டுமடா?
பறிபோன நம் சுதந்திரம் மீண்டும் எப்போது?
வன்னியில் பெருகிய குருதியாற்றில் நீண்டு வளர்ந்த மரம் கூட
நம் தேசம் அழுத கதை சொல்லும்
கடல் நீரே வற்றி போய்
வானம் கூட அழுகைக்கு ஆனதே
கடல் எங்கும் நாமே ஆனோம்
வயல்களும்,பனைமரங்களும்
காடுகளும், கூவும் குயில்களும்
துயில்வோரை நினைத்து பாடுமடா- தேசம் வேண்டுமென்றே
களத்தில் கருகிப்போன
வன்னி தேசம் துளிர்த்திட
சுதந்திர மழை வேண்டுமென நெஞ்சம் துடித்ததோ?அம்மா!
வாழும் வயதினில் வாசமலர்களாய் தீயில் கருகி போனோம்
மீண்டும் பிளைத்திட வழி ஏதுமுண்டோ?
உள்ளக்குமுறலின் சொல்லவோ? நான்
தனிதேசம் பிணம் தாண்டிய கதை சொல்லவோ?
இறுதி போரில் நம் ஈழம் இழந்த கதைசொல்லவோ?
பள்ளி சென்ற பாதங்கள் களம் சென்ற கதை சொல்லவோ?
வெள்ளருவி பாய்ந்த நம் தேசத்தில் செந்தருவி பாய்ந்த கதை சொல்லவோ?
வன்னியின் அழுகுரல் ஒலிக்குதையா?இன்னும்
மீளுமா நம் தமிழ் ஈழம் என
சிந்திய செந்நீர் துடைத்திட கைகள் இல்லையம்மா!
வன்னியின் களச்சாவில் துயில்ந்தோரை நினைத்தே
நெஞ்சம் கணக்குத்தம்மா!
என்று தான் தணியும்
இந்த தாகம் என
நம் தொண்டைக்குழியும்
காத்து கிடக்குதம்மா!
P.டிலக்சி