தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற புழங்கு பொருட்கள் தொடர்பான நாட்டார் வழக்காற்றியல் பன்னாட்டு ஆய்வு மாநாட்டின் ஆதார சுருதி உரையினை யாழ்ப்பாணப்பல்கலைகழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் வழங்கினார்.
தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி. திருவள்ளுவன் அவரைப்பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மாநாட்டின் ஆய்வேட்டினை நாட்டுப்புறக்கலைஞர் தஞ்சை சின்னப்பொண்ணு வெளியிட்டுவைக்க நாட்டுப்புற ஆய்வாளர் தஞ்சை சாம்பான் பெற்றுக்கொண்டார் .