செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் எழுத்துலக வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த தாமரைச்செல்விக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு

எழுத்துலக வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த தாமரைச்செல்விக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு

2 minutes read

தமிழ்த்தாயின் நீடித்த நிலைத்த வாழ்வுக்காய் தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகளை அர்ப்பணித்த தாமரைச்செல்வியின் எழுத்துலக வாழ்வின் 50 ஆண்டுகளின் நிறைவையொட்டி அவரின் இலக்கிய வாழ்வை நினைவுகூரும் நிகழ்வு இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள திறன் விருத்தி மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அரும் பெரும் பணி

கிளிநொச்சி இளைஞர் வட்டாரத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் 50 ஆண்டுகளை எழுத்துலகுக்கு அர்ப்பணித்த தாமரைச்செல்வியின் எழுத்துலக வாழ்வு தொடர்பான விடயங்களும்,

அவர் தமிழ் சமூகத்திற்கு எழுத்துக்களால் ஆற்றிய அரும் பெரும் பணியும் அழகாக நினைவுகூரப்படவுள்ளது.

May be an image of 1 person, smiling and text that says 'தாமரைச்செல்வி எழுத்துலக வாழ்வில் 50 22.10.2023 ஞாயிறு காலை 9.30 மணி தொடக்கம் திறன்விருத்தி மண்டபம், கண்டி வீதி (A9) புதிய பேருந்து நிலையம் அருகில், கிளிநொச்சி. கிளிநொச்சி எழுத்தாளர்கள், வாசகர்கள் இளைஞர் வட்டம், குமரபுரம் பரந்தன்'May be an image of text that says 'தலைமை- கருணாகரன் வரவேற்புரை- கவிஞர் அநாமிகன் (ஆசிரியர்) தாமரைச்செல்வியின் எழுத்துலகம் யல்வாணன், (பிரதிக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம். சுமைகள் கவிஞர் தீபச்செல்வன் (ஆசிரியர்) வேள்வித்தீ ப. தயாளன் (ஆசிரியர்) விண்ணில் அல்ல விடிவெள்ளி த. அஜந்தகுமார் (விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ் பல்கலைக்கழகம்) தாகம் ந.குகபரன் (ஆசிரியர்) வீதியெல்லாம் தோரணங்கள் தமிழ்க்கவி (எழுத்தாளர்) பச்சை வயல் கனவு தாட்சாயினி (பிரேமினி, பிரேதச செயலர், சங்கானை) உயிர்வாசம் கலாநிதி சு. குணேஸ்வரன் (ஆசிரியர்) வன்னியாச்சி ராஜேஸ்கண்ணா (விரிவுரையாளர், சமூகவியல்துறை, யாழ் பல்கலைக்கழகம்) சின்னாசிக் கிழவனின் செங்காரிப்பசு ப்ரீலேகா பேரன்பகுமார் (ஆசிரியர்) சிறப்பாளர்கள் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் (மாவட்டச் செய்லர், கிளிநொச்சி) Dr. சத்தியமூர்த்தி (பணிப்பாளர், யாழ் போதனா மருத்துவமனை, வட மாகாண சுகாதார திணைக்களம்) நன்றியுரை செந்தூரன் (ஆசிரியர்) கிளிநொச்சி மண்ணின் அடையாளத்தை எழுத்தின் வழியே உருவாக்கிய ஆளுமையைக் கொண்டாடுவோம். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.'
நன்றி -ஐபிசி தமிழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More