செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் லண்டன் எழுத்தாளர் அ. இரவியின் நாவலுக்கு கிளிநொச்சியில் விமர்சனக் கூட்டம்

லண்டன் எழுத்தாளர் அ. இரவியின் நாவலுக்கு கிளிநொச்சியில் விமர்சனக் கூட்டம்

1 minutes read

லண்டனைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் அ. இரவி எழுதிய கொற்றவை பற்றி கூறினேன் என்ற நாவலுக்கு விமர்சனக் கூட்டம் கிளிநொச்சியில் இடம் பெற உள்ளது.

ஈழத்து எழுத்தாளரும் தமிழ்த் தேசியக் கலை இலக்கிய பேரவையின் தலைவருமான தீபச்செல்வன் தலைமையில் எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை 3 மணிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

விமர்சன உரைகள்

இதில் முன்னாள் உதவி கல்விப்பணிப்பாளர் செ. விந்தன் , முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் அ. சத்தியானந்தன் கிளிநொச்சி மத்திய கல்லூரி உயர்தர மாணவர் ஒன்றியத் தலைவர் பால சயந்தன் ஆகியோர் விமர்சன உரைகளை ஆற்ற உள்ளனர்.

லண்டன் எழுத்தாளர் அ. இரவியின் நாவலுக்கு கிளிநொச்சியில் விமர்சனக் கூட்டம் | London Writer Ravi S Novel Review Meeting

 

நிகழ்வில் வரவேற்புரையினை தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவையின் செயலாளர் கி. அலெக்சன்  வழங்க நன்றி உரையினை கவிஞர் குறிஞ்சியூர் வில்வரசன் நிகழ்த்துகிறார்.

நிகழ்ச்சியினை யாழ். பல்கலைக்கழக மாணவன் லம்போ கண்ணதாசன் தொகுத்து வழங்குகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More