சீனக் கப்பல் வருகுது
சீத்தாராமனும் வாரா
சீன தூதர் வந்து
சிக்கல் தீர்க்கபோரா
நாம் அழுத நேரம்
யாரும் இங்கு காணும்
கூடி நின்று எம்மை
கொலைசெய்த கூட்டம்
நாங்கள் கொஞ்சம் நலிந்தா
நலம் விசாரிக்க நரியா
மிச்சம் என்ன இருக்கு
கச்சையே அடகு போச்சு
கைகொண்டு மறைத்த மானம்
பார்க்க வந்தா சரியா
நீங்க போட்ட திட்டம்
நடத்த அரசு கூட்டம்
வெட்கம் கெட்ட நாமும்
மீண்டும் மீண்டும் தெரியும்
அடுத்த தேர்தல் வரைக்கும்
மாயக் கண்ணீர் வடிக்கும்
சனநாயக பெருங் குற்றம்
யார் அழுது தீரும்
நமக்கு நம் செய்யும் பாவம்
வட்டக்கச்சி வினோத்