வரலாற்றை படைத்துவிட்டு
கண்மூடிக்கொண்டார்கள்,
அவர்கள்.
கல்லறை கூட இல்லாமல் கண்கலங்கி நிற்கிறோம் நாங்கள்.
கார்த்திகை வந்ததுமே செங்காந்தள் பூக்கும்
கறுத்த வானமே விழிநீரை சொரியும்
இடிசத்தம் போர்கதையை வரிவரியாய் சொல்லும்
மின்னல் தரும் பேரொளியில் வீரர் முகம்தெரியும்
இருள் வரும் நேரத்தில் ஒளிதீபம் ஏறும்
இறையான வீரத்தின் கதைகளை பேசும்
கண்ணீரில் வரைந்த காவியத்தை யார் அழிக்க முடியும்
செங்காந்தள் பூக்கும் ஊரெல்லாம்
சிவப்பு மஞ்சள் கொடி பறக்கும்
தெருவெல்லாம்
கார்த்திகை பாடல் கண்ணீர் வரவைக்கும்
கார்த்திகை மாதம் மழையில் நனைக்கும்
மாவீரர் நினைவில் மனமெல்லாம் கலங்கும்
அவர் நடந்த சுவடுகளை மழைநீர் முத்தமிடும்
காவல் தெய்வமாக அவர் முன்
ஒளி ஏறும்
ஒருநாள் அவர் தாகம் நிறைவாகும்
அன்று எம் தேசம் மலர்ந்திருக்கும்
வட்டக்கச்சி வினோத்