விடுகதையான வாழ்வில்
விடைதேடி அலைகின்றோம்
கிளையிலிருந்த பொழுதுகளை
மீட்கும்
அலையில் மிதக்கும்
சருகுகளாக!
சுமந்த கனவுகள்
நீரினில் எழுத்தாக-இன்று
கண்ணீரில் நனைந்திடும்
காகிதங்கள் அதை கூறும்
மண்காக்கச் சென்றோர் மண்ணோடு மடிந்தனரே!
காணாமல்ப் போனோரைத் தேடி
கண்டோர் யார் இங்குள்ளர்?
உதிரம் சொட்டிட
உயர்ந்த கைகளும் உருவமே
தெரியாது சிதைந்த உடல்களும்
காப்பாற்றுவோரின்றிக்
கதறிய உயிர்களும்
நந்திக் கடலோசையும்
முள்ளியின் நினைவுகளும்
கார்த்திகையின் மகிமையும்
கனவிலும் கலையாதவை!
இராவண தேசமதில்
இறுதி மூச்சை விடுவோமா? – என
முப்பொழுதும் ஏங்கி வாழும்
முகமிழந்தோர் கையெழுத்து.
புரட்சிகா