15
ஈழத்து எழுத்தாளரும் யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல்அ அறிமுகவிழா யாழ் பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 1மணிக்கு இடம்பெறவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மாணவர் ஒன்றியம் அழைப்பு
எந்தக் களத்தைக் குறித்து இந்த நாவல் எழுதப்பட்டதோ அக் களத்திலேயே நடக்கும் வெளியீடு என்றும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் நிகழ்வுக்கு மாணவர் ஒன்றியத் தலைவர் கே. துவாரகன் தலைமை தாங்குகின்றார்.
பிரதம விருந்தினராக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் வருகை தருவதுடன் சிறப்பு விருந்தினராக அரசறிவியல் துறைத் தலைவர் கே.ரி. கணேசலிங்கம் கலந்துகொள்கிறார். நாவல் விமர்சனத்தை சைவசித்தாந்த்தத் துறையை சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் தி. செல்வமனோகரன் வழங்கவுள்ளார். ஏற்புரையை பயங்கரவாதி நாவலின் ஆசிரியரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் வழங்குகின்றார்.
வரவேற்புரையை கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ. நெவில்குமாரும், நன்றியுரையை கலைப்பீட மாணவர் ஒன்றிய செயலாளர் சி. கிருஷ்ணராஜூம் வழங்க நிகழ்ச்சியை யாழ் பல்கலைக்கழக மாணவரும் தொலைக்காட்சி அறிவிப்பாளருமான ஆர்.ஜே. டயன் தொகுத்து வழங்குகின்றார்.