மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியின் தொல்காப்பியர் அரங்கத்தில் தமிழர் இனவரையியல் கழகத்தினரின் சிறந்த ஆய்வு நூலுக்கான எட்கர் தர்ஸ்டன் விருது வழங்கும் வைபவம் அண்மையில் இடப்பெற்றது.
’தமிழ்ச் சமூகப்பூசகர்கள் :பிடாரி வழிபாட்டில் வாழும் சாதி வரலாறு’ என்ற ஆய்வு நூலை ஆக்கிய காந்தி கிராமம் பல்கலைக்கழக கௌரவ விரிவுரையாளர் முனைவர் மு செல்வகுமார் அவர்கள் தமிழர் இனவரைவியல் கழக தலைவர் , மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என் .சண்முகலிங்கன் அவர்களிடமிருந்து விருதினைப்பெற்றுக்கொண்டமையை படத்தில் காணலாம் . உடன் தமிழர் இனவரையியல் கழக செயளாளர் மானிடவியல் பேராசிரியர் பக்தவத்சலபாரதி அவர்கள்.
இதே அரங்கில் கேரளா அரசு கலை அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் முது முனைவர் நா,செந்தில் அவர்களின் ‘வெறியாட்டமும் தெய்யமும் : சங்ககால வேலன்மாரின் சமகால இனவரைவியல் –ஆய்வு நூலும் தமிழர் இனவரைவியல் கழகத்தினரால் வெளிட்டு வைக்கப்பட்டது.