எங்களின் கடைசி சத்தம் என்று நினைக்கவும் முடியவில்லை
தொடர்கதையா என்றும் தோன்றவில்லை
ஆனால் என்னவோ அஸ்தமித்து நிட்கின்றோம்
விடியவும் இல்லை எழவும் இல்லை
கிழக்கை நோக்கிய பார்வை ஏக்கங்களாகவே போகின்றது
ஒன்பது ஆண்டுகள் அனாதைகளாக எம் இனம்
அரசியல்வாதிகளோ சந்தோசத்தின் உச்சியை தொட்டு
ஒன்பது வருடங்கள் கழிந்ததை நினைத்து சந்தோசப்பட்டுக்கொண்டிருக்கும்
நிலையில் அரசியலோ அறிவோ இல்லாத தமிழர்களாக நாங்கள்
இலங்கை தீவிலே எல்லா இனத்துக்கும் இறந்தவர்களை நினைவுகூர
இடம் காலம் ஒதுக்கலாம் ஆனால் தமிழினத்துக்கு இயலாது
அரசபயங்கரவாதம் போலவே தமிழ் அரசியல்வாதிகளின்
நாடகமும் இறந்தவர்களை நினைவுகூர இயலாத உங்களால்
அரசியல் மட்டும் தான் நடத்தலாம்
தமிழ் மக்களின் மனதைஉங்களால் புரிந்துகொள்ளமுடியாது
ஆட்சிமாற்றத்தை எதிர்பாத்த எம்மக்களை
அடுத்த தலைவனுக்கான போட்டியில் தோற்றுவிட்டது
அடுத்த கட்சி
சுயநலம் நிறைந்த நீங்கள் எங்கள் மரணித்த மக்களையோ
உயிராயுதங்களையோ ஏமாற்ற நினைக்கலாம்
ஆத்மாக்களை நினைத்து பாருங்கள்
முப்பது வருடங்களாக காவல்காத்த தெய்வங்களை
உங்களின் உழைப்புக்காக்க உயிர்நீத்த மக்களை
உங்களலால் ஏற்றப்படும் தீபம் கூட அணைந்துவிடும்
முள்ளிவாய்க்காலில்
தண்ணீரில் தீபம் எரியும் முள்ளியவளை தெய்வம் கூட உங்களை மன்னிக்காது
உங்கள் அரசியல் நாடகத்தை நடத்துங்கள்
எங்களுக்கான தீபங்கள் எரிந்துகொண்டே இருக்கின்றன
இராணுவமுகாம்களில் பாதுகாப்பாக முள்வேலிக்குள்
புத்தன் குடிகொண்டதாலும் தீபங்கள் எரிகின்றன
நீங்கள் சண்டைபிடிக்கத்தேவையில்லை தீபங்களுக்க்காக
எங்களுக்காக தயவுசெய்து அரசியல் நடத்தாதீர்கள்
-இனியவன்