9
கள்ளச் சாராயமோ
நல்ல சாராயமோ
எல்லா சாராயமும்
எரித்தே கொல்லும்
கொஞ்சம் அடிச்சா
குஷியா இருக்கும்
கூட அடிச்சா
சரிச்சு போடும்
மெல்ல ஆளை
அனுப்பிப் போடும்
பியர் பிராண்டி வொட்கா
டாக்டர் இயமன் தரும்
மருந்து கண்டீர்
மயக்க வச்சு
மடக்கி போடுவார்
வலையை வீசி
பிடிச்சு போடுவார்
கவனம் கவனம்
கள்ளச் சாராயமோ
நல்ல சாராயமோ.
பா. உதயன்