விண்ணும் வியந்தது
வீரத் தமிழன்
வானூர்தி கண்டு
திகைத்துப் போனது.
மண் பிறந்த
மனிதர் எல்லாம்
மகத்தானவர் தான்
செயல் வழி வேறானவர்
தலைவர் என்று
செல்லமாக அழைத்து
ஆராதித்த வேங்கைகள்
உள்ளம் வாழ்ந்தவர்.
கண்டு தந்தது இவை
சொல்லி செல்ல பெருமை
நெஞ்சை நிமிர்த்தி
ஈழத்தமிழன் என்று சொல்ல.
சின்ன வயதில்
சிரம் குனிந்து வாழ
வெட்கி நின்ற வீரர்.
தந்தைக்கு வழியானவர்.
தாயுமாகி தந்தையுமாகி
ஈழச் சிறார் வாழ்வு
ஒளிபெற்று பெரு வாழ்வு
வாழ்ந்தேற வழி தந்தவர்.
எழுபது அகவை பெற்று
ஏணியாகி இன்றும் நின்று
பெரும் தலைவர் என்றுரைத்து
நெஞ்சை நிமிர்த்துவோம்.
ஈழம் வென்ற பின்னும்
இவர் போலொரு தலைவர்
கிடைத்திட கூடுமோ
ஏங்கிடும் எமது மனம்.
முதலில் இல்லை
இருந்தும் தொடங்கி
இறுதியில் நின்றார்
உலகை வியக்க வைத்து.
போர் முறை வரைந்து
புது இலக்கணம் தந்து
வெற்றி பெற்று நின்றார்
பின் வந்தவர் படித்திட.
நிழலரசை நிறுவி
நினைவில் இருக்கும் படி
நகர்ந்து காட்டினார்.
நாடென்றால் இப்படியென்று.
எடுத்து படிக்க இவர்
வரலாறு போதும்.
வாழ்வு மாறி வளமாகி
நிலைத்து செழித்திடும்.
கார்த்திகை 26
வல்வெட்டித் துறை
வாழ்வாங்கும் வழியில்
மண்ணில் பிறந்தார்.
பொலனறுவை மண்
கண்ட இளமுத்து அவர்
எல்லாளன் சிலையருகே
பிறந்த பயன் பெற்றார்.
நாடோடி வேலையாக
கிடைத்த அரச வேலை
இடமாற்றம் கண்ட இவர்
தந்தை பயன் பயணமிது.
ஈழம் நீண்டு வந்தது
தமிழர் வாழ்வு நிலைபெற.
இனியொரு உலகம் செய்து
அதிலேறி நாடமைப்போம்.
தலைவர் வழி நின்று
அவர் சிந்தனை கற்றேறி
தேறிய பயன் காட்டிடும்
பிறந்த நாள் வாழ்த்துகள்.
நீடூழி வாழ வாழ்த்தும்
தமிழ்வழி நானாக
நாவெல்லாம் தமிழோடு
இனிதே என் வாழ்த்துகள்.
நதுநசி