56
வீட்டுக்கு வந்து
தேடிய போதும்
இல்லை நீயங்கே
எங்கே போயிருந்தாய்.
தட்டில் பூ கொண்டு
தாவணி போட்டு நீ
போனதாக பேச்சு
வீட்டில் கேட்டேன்.
எந்தக் கோவில்
போயிருப்பாய் நீ.
எண்ணம் ஓடி தேட
நினைப்பு வந்தது.
கல்லறை மேனியர்
தூங்கிடும் கோவில்
மாவீரர் துயிலில்லம்
நீ போயிருப்பாய்.
வணங்கிடும் தெய்வம்
மாவீரர் அவரின்றி
நமக்கு வேறேதோ?
அறிந்திலேன் நான்.
இளம்வயதில் அவர்
ஈழம் மீட்டிட பேயினர்.
கார்த்திகை நாளில்
மனதால் தொழுதிடுவோம்.
புரிவாயோ என்னை
எந்தன் மனமே!
நதுநசி