சிலையாகிய சிற்பங்கள் உறையாகிய என் உறைவிடம் அது
ஆழங்கான எம் வரலாறு
சிதைத்திடவே சிலரின் பொறுமல்கள்
பொங்கி எழுவோம்
சினம் கொண்ட சீற்றத்துடன்
சீறிடும் எம் மானம்
நிம்மதியாய் ஓர் உறக்கம் என உரக்க சொல்லாதே
விழித்திடுவோம் வரம்பெல்லை மீறி
கனவுகள் நனவாகாமல்
வாய்திறந்திடவும் முடியாமல்
தத்தளிக்கின்றோம்
காரிருள் மூடிய கருவறை அது
சிதைக்க வந்தாய்
சிதைத்தாய்
தூக்கம் கலைத்தாய்
கையில் அம்பொன்று வந்தால்
உன் ஒய்யாரமான சந்ததியும் ஓலமிடும்
பற்றவைத்த நெருப்பொன்று
பாழ்பட்டுபோனதென்றா நினைத்தாய்
குமுறும் பூகம்பமும் ஒருநாள் வெடித்தே தீரும்
தீரா கனவுகளுடன் உறங்கின்றோம்
வலியொன்று விழுமேயானால்
புதைகுழியும் உன் உறைவிடமாகும்
உயிர்பெறும் காலம்
உன் கருவறை சிதைத்து சாம்பலாக்குவோம்.
கேசுதன்