இன்பமயமான இரவுகளும்
இயற்கையோடு இனிதான எம்
வாழ்கையும் எம் தேசக் காற்றினையும்
இதமாய் காதலிக்கின்றேன்
மழையோடு ஊடல் கொள்ளும்
காற்றினையும்
மண்வாசம் புணரும் தேகத்தினையும்
காதலிக்கின்றேன்
தெய்வங்களும் காதலிக்கின்றனர் அவன்
குறுநகை கண்டு என் காதல் மட்டும் ஒதுங்கிடுமா
நானும் காதலிக்கின்றேன்- எம்
பெருந்தாய் புதல்வனை….
தேசத்திற்கான மீட்டலிலும் ஊடுருவிய எம் தாய் நாட்டு
களங்களை காதலிக்கின்றேன் .
மாண்புமிகு தலைவன் காட்டிய பாதையின் தனித்துவத்தை
காதலிக்கின்றேன்
கொச்சைப்படுத்தியவன் குடல்களையுருவி என்
சேனையின் முன் நாட்டிய புலிக்கொடியை
காதலிக்கின்றேன்
சேற்றுச்சுனையில் வழிந்திடும் நீரினை போல
உதிரம் வழிந்திடும் வெறியர்களின் சடலங்களை
புதைத்திடும் என் வீரர்களை
காதலிக்கின்றேன்.
என் மேல் உடுத்தியது போர்வையல்ல எங்கள்
வீரத்தின் மறு உருவம்
காகிதங்களால் குறிப்பதற்கு இதுவொன்றும்
காழகமல்ல
வீரத்தின் அடையாளம் சரீரம் மேவிய
வரிபுலி கவசம்
அணிந்தவன் அறிவான் பக்குவமாய்
காதலிக்கின்றேன்
விடமலை அணிந்தவன் பரம்பொருள் ஆன
பராபரன்
அதனால் தான் என்னவோ எம்மவர்களும்
தெய்வங்களாய் போற்றப்படுகின்றனரோ
நம் மாந்தர் மனதில்
தோளோடு தொட்டிடும் விஷமாலையையும் பக்குவமாய்
காதலிக்கின்றேன்
தோளேறிய துப்பாக்கியும் சொல்லும்
என்னோடு இணைந்த நாட்களை
சூறையாடிய கள்வர்களை கூண்டோடு
கிழித்த யாக்கைகளை
பல குண்டுகளும் சொல்லும் சுடுகலன்
தூக்கிய கைகளை
பயமறியாது தாங்கிய கைகளை நம்பி
என் தோள்களில் சாய்ந்திடும் பிள்ளையை(துப்பாக்கி )
காதலிக்கின்றேன் என் சிசுவாக
நிழல்களை தாங்கிய வரம்பு மேடுகளில்
வண்ணத்து பூச்சிகளின்
துரதிஷ்டமாய் துரத்திடும் குழந்தைகள்
பாட்டாளிகளின் ஆசுவாசம் ஆற்றிடும்
கார் மேகங்கள் பல்தேசம் கண்டிராத நம் தேசம்
காதலிக்காமல் இருப்பேனா
கருவறை சுமந்திடும் தாயாய் நம் களங்களை
சுமந்திடும் தோழமைகள்
எளிமைகளை வலிமைகளாக்கி திசைகளை
கூர்மையாக்கி தானை தலைவன் பால்
முரசொலி முழங்க சீறிடும் செந்தணல் தீயாய்
கயவன் கொலை மிரட்டிடும் செம்மணல்
களக்காற்றினை ஆசுவாசமாய்
காதலிக்கின்றேன்.
கேசுதன்