செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முருகபூபதி எழுதிய ‘யாதுமாகி’ வெளியீடு !

அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முருகபூபதி எழுதிய ‘யாதுமாகி’ வெளியீடு !

1 minutes read

அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முருகபூபதி எழுதிய யாதுமாகி ( பாகம் -02 ) மின்னூல் மெய்நிகரில் வெளியீடு !

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் லெ. முருகபூபதி எழுதியிருக்கும் யாதுமாகி ( 02 ஆம் பாகம் ) மின்னூல் அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மார்ச் மாதம் அமேசன் கிண்டிலில் வெளியாகிறது.

இதன் வெளியீட்டு அரங்கு மார்ச் மாதம் 15 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் இடம்பெறும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாதுமாகி – முதலாம் பாகத்தின் மின்னூலை வெளியிட்டிருக்கும் முருகபூபதி, இந்த ஆண்டு மீண்டும், அதன் இரண்டாம் பாகத்தினை வெளியிடுகிறார்.
முதல் பாகத்தில் 28 பெண் ஆளுமைகள் இடம்பெற்றனர். குறிப்பிட்ட நூலை தற்போதும் அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.

எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் யாதுமாகி ( இரண்டாம் பாகத்தில் )
( அமரர்கள் ) யோகா பாலச்சந்திரன், மகேஸ்வரி சொக்கநாதர் , பாக்கியம் பூபாலசிங்கம், கமலி ஞானசுந்தரன், பராசக்தி சுந்தரலிங்கம் , கலாலக்ஷ்மி தேவராஜா, சங்கீத கலாநிதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன், மற்றும் , புஸ்பராணி தங்கராஜா, கலையரசி சின்னையா, ஞானலக்ஷ்மி ஞானசேகரன், ஆனந்தராணி பாலேந்திரா, மெல்பன் மணி , யோகேஸ்வரி சிவப்பிரகாசம் , சந்திரகௌரி சிவபாலன், ரேணுகா தனஸ்கந்தா , சாந்தி சிவக்குமார் , விஜயலக்ஷ்மி இராமச்சந்திரன் , நவஜோதி யோகரட்ணம், பூங்கோதை – கலா ஶ்ரீரஞ்சன், கவிஞி அனார், தேவகி கருணாகரன் , சூரியகுமாரி ஶ்ரீதரன் பஞ்சநாதன் , தேவகௌரி சுரேந்திரன் , சியாமளா யோகேஸ்வரன் , வசந்தி தயாபரன் , உஷா ஜவகார் , பத்மா இளங்கோவன், ராணி சீதரன் , சுபாஷினி சிகதரன் , சிவநேஸ் ரஞ்சிதா ஆகியோரின் கலை, இலக்கிய, கல்வி, சமூக தன்னார்வத் தொண்டுப்பணிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்நூல் கலை, இலக்கியவாதி ( அமரர் ) அருண். விஜயராணி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

யாதுமாகி ( இரண்டாம் பாகத்தின் ) முகப்பு ஓவியத்தை மெல்பனிலிருந்து ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம், மற்றும் அக்கினிக்குஞ்சு யாழ். பாஸ்கர் ஆகியோர் வடிவமைத்துள்ளனர்.
சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், புனைவு சாராத பத்தி எழுத்துக்கள் , திறனாய்வு முதலான துறைகளில் எழுதிவந்திருக்கும் எழுத்தாளர் முருகபூபதியின் மற்றும் ஒரு வரவுதான் யாதுமாகி ( இரண்டாம் பாகம் ) இலங்கையில் பாரதி, வாழும் வரலாறு மல்லிகை ஜீவா, பாரதி தரிசனம் , The Mystique of Kelani River (ஆங்கில மொழிபெயர்ப்பு ) ஆகிய முருகபூபதியின் இதர நூல்களையும் அமேசன் கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்க முடியும்.
—-0—-

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More