செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிமகள் ஜெயவதியின் ‘எழுத்துக்களோடு பேசுகிறேன்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

கவிமகள் ஜெயவதியின் ‘எழுத்துக்களோடு பேசுகிறேன்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

2 minutes read

கவிமகள் ஜெயவதியின் ‘எழுத்துக்களோடு பேசுகிறேன்’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மட்டக்களப்பில் தமிழ் சங்க மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் கடந்த வியாழக்கிழமை (13)  வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  முதன்மை விருந்தினராக  சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி கலந்து கொண்டு முதல் நூலை பெற்று அதனை வெளியீட்டு வைத்தார்.

மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பிக்கப்பட்டு SPAND அமைப்பின் சிறுவர் கழக உறுப்பினரான நிகேஷ் தமிழ்மொழி வாழ்த்தினை தொடர்ந்து வரவேற்பு நடனமானது இடம்பெற்றது இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து கதிரவன் கலை கழகத்தினுடைய தலைவர் கதிரவன் இன்பராசா அறிமுக உரையினையடுத்து  சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளர் திரு.க.மோகனதாசன் உரையாற்றினர்.

மகரகம தேசிய கல்வி நிறுவகம் தமிழ்மொழி துறை பணிப்பாளர் கலாநிதி  முருகு தயாநிதி , மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியினுடைய பணிப்பாளர் செல்வரத்தினம் ஜெயபாலன் ஆகியோர்களின் அதிதிகளாக கலந்துகொண்டு உரையாற்றினர்.

அதனை தொடர்ந்து நூலாசிரியர் கவிமகள் ஜெயவதி ஏற்புரை இடம்பெற்றதை தொடர்ந்து SPAND அமைப்பினர்களாலும் கதிரவன் கலைக்கழக உறுப்பினர்களாலும் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களாலும் நூலாசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டது.

தொடர்ச்சியாக வருகை தந்த கவிஞர்களுக்கு நூலாசிரியரின் கரங்களால் நூல் வழங்கப்பட்டு சுகுணதாஸ் சசிகுமார் நன்றியுரை உடன் நிகழ்வானது இனிதே நிறைவடைந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More