உலகப்புகழ் பெற்ற மானிடவியல் பேராசிரியரும் என் குருநாதருமான கணநாத் ஒபயசேகரா அவர்களின் மறைவுச்செய்தி நெஞ்சில் எழுதும் துயரம் தாங்கமுடியாதது என்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
மானுடவியல் பேராசிரியர் கணநாத் ஒபயசேகரா தனது 95 வயதில் காலமானார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை சமூகங்களின் மானிடவியலை ஆழ எழுதிய புலமையாளர். எண்ணற்ற நூல்களின் ஆசிரியர். அறிவுத் துணி வோடு மானிடவியலுக்கு அவராற்றிய பங்களிப்பு இணையிலாதது.
பேராதனைப்பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விரிவுரையாளராக தொடங்கிய பயணம் ,அமெரிக்க பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தின் மானிட வியல் பேராசிரியராக, துறைத்தலைவராக உயர்வுகளைக் காணும். தனிப்பட்டமுறையில் என் பல்கலைக்கழக மாணவப்பருவத்திலேயே அவரின் ஆய்வு உதவியாளனாகும் பேறு எனக்கானது. எங்கள் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், மானிடவியல் கலைத்திட்ட உருவாக் கத்தில், என் கலாநிதிப்பட்ட ஆய்வில் வழிகாட்டியானவர்.
எங்கள் புலமை அடையாளமாக அவர் நீழலில் நிமிர்ந்திருந்தோம். இன்று தனித்தோம் . அவர் மேலான நினைவுகளை , புலமை மரபின் தனித்து வங்களை காத்து நிற்றலை அவருக்கான அஞ்சலியாக்குவோம்! என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.