அமைதியாய் துயிலும்
நதியும் அழகே
அதன் அருகினில்
பாடும் மலையும் அழகே
காலையும் அழகே
மாலையும் அழகே
காலங்கள் சொல்லும்
இயற்கையும் அழகே
பறவைகள் பாடும்
மொழியும் அழகே
கடல் அலை பாடும்
கவியும் அழகே
காலையில் பூத்திடும்
பூக்களும் அழகே
அந்த பூவினில் தெரியும்
புன்னகை அழகே
சிட்டு குருவியின்
சிரிப்பு ஒலி போலே
சிரித்திடும் குழந்தையின்
சிரிப்பொலி அழகு
அந்தியில் பூத்த
வானமும் அழகே
அதன் அருகினில் தெரியும்
நிலவும் அழகே
கூவிடும் குயிலின்
குரலிசை போலே
அழகிய மொழியாம்
தமிழ் இசை அழகே .
அழகிய கிளிகள்
பறப்பதும் போலே
அம்மாவின் அன்பும்
அதுபோல் அழகு
அழகிய சுரமாய்
உயிர்த்திடும் சிலையின்
சிற்பியின் உளியின்
ஓசையும் அழகே
அத்தனை இருப்பும்
ஆழ்ந்த பொருளே
அமைதியாய் துயிலும்
அந்த நதியினை போலே.
-பா. உதயன்