எழுத்தாளர் ந. இரவீந்திரன் எழுதிய “இலங்கைத் திணை அரசியலில் வர்க்கப் போராட்டம்” என்ற நூலுக்கான விமரிசனக் கலந்துரையாடல் நிகழ்வு, எதிர்வரும் 5ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
கொழும்பு தமிழ் சங்கம் வினோதன் மண்டபத்தில் இடம்பெறும் இந்த நிகழ்வில் வை. வன்னியசிங்கம் தலைமை தாங்குகின்றார். அத்துடன் விமர்சன உரைகளை சு. தமிழ்செல்வன், வசந்தி தயாபரன், மல்லியப்பு சந்தி திலகர், தெளிவத்தை ஜோசப் ஆகியோர் நிகழ்த்தவுள்ளளர்.
சமூக விழிப்புணர்வுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் நன்றி உரையை இதயராசனும், ஏற்புரையை நூலை எழுதிய ந. இரவீந்திரனும் வழங்குகின்றனர்.