4
“தனிமரம் ஒன்று…” சினம்கொள் பாடல் வரிகளாக..
தனிமரம் ஒன்று காற்றினில் ஆட
தாய்மனம்போல தாயகம் துடிக்க
அனல் முகம் எல்லாம் விடியலின் வேட்கை
அலை கடல் போலே அலைந்திடும் யாக்கை
நதி போல அலையும் விண்ணில்
சதியாலே உழலும் மண்ணில்
ஒரிடம் தேடும் தாயகப் பிள்ளை
ஓய்வின்றி போகும் கால்களின் எல்லை
ஒளிகொடுத்த நிலவும் இல்லை
சிறகசைத்த கொடியும் இல்லை
புலி புகுந்த நிலமும் இல்லை
புயல் அடித்த தடமும் இல்லை
விழியில் எரியும் வீரம் உண்டு
குழியில் கனலும் தாகம் உண்டு
நெஞ்சில் எரியும் நினைவு உண்டு
நிலத்தில் நிமிரும் கனவு உண்டு
நேற்றிருந்த ஊரும் இல்லை
கூடி வாழ்ந்த உறவும் இல்லை
களத்தில் நின்ற தோழன் இல்லை
கதைகள் பேச யாரும் இல்லை
உயிரில் சுமந்த தேசம் இங்கே
உணர்விழந்து போவதேங்கே
நெஞ்சில் எரியும் நினைவு உண்டு
நிலத்தில் நிமிரும் கனவு உண்டு
படம்: சினம்கொள்
பாடியவர்: லிகேஷ் குமார்
இசை: என்.ஆர். ரகுநந்தன்
பாடலாசிரியர்: தீபச்செல்வன்
பாடல் இணைப்பு https://youtu.be/ia6pA13X9vw