பல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி வர்ணராமேஸ்வரன் நேற்றையதினம் உயிரிந்துள்ளார்.
தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் நேற்று சனிக்கிழமை காலை கனடாவில் உயிரிழந்துள்ளார்.
மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒலிக்கசிடப்படும் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே..” பாடலில் இவரது குரலும் முதன்மையாக இடம்பெறுகின்றது. இதனால் ஈழத் தமிழ் மக்களின் ஆத்ம அபிமானத்திற்குரியவராக வர்ணராமேஸ்வரன் காணப்படுகிறார்.
இவருடைய உணர்வு பாடல் குரல் கேட்டு ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் உணர்வு பாடலாய் கண்களில் நீரை வரவழைந்த உணர்ச்சிகளை தூண்டிய அந்த குரலின் சொந்தகாரர் மறைந்தார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
கொரோனா தொற்றினால் ரொறோன்ரோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.