மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய “அது ஒரு அழகிய நிலாக்காலம்” வன்னியின் மூன்று கிராமங்களின் கதை தொகுப்பு நூல் வெளியாகவுள்ளது.
வணக்கம் இலண்டனில் தொடர்கதையாக வெளிவந்த சமயத்தில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இத் தொடர், நூலாக தொகுக்கப்பட்டு சுப்ரம் பிரசுராலயத்தால் வெளியிடப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
சுப்ரம் சுரேஷ் தலைமை வகிக்கும் நிகழ்வில் நூல் அறிமுகத்தை கவிஞர் கருணாகரனும், விமர்சனத்தை பேராசிரியர் ப. புஸ்பரட்ணமும், இலக்கியப் பார்வையை மூத்த ஊடகவியலாளர் ராதேயனும், வாழ்வியல் பார்வையை எழுத்தாளர் வெற்றிச்செல்வியும், நன்றியுரையை ப. தாயளனும் வழங்க உள்ளனர்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி காலை 8.30 மணிக்கு கிளிநொச்சி மண்ணின் குமரபுரம் பரந்தரனில் உள்ள சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில் இடம்பெறும் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.