ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர், அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் இறைபதமடைந்தார்.
அச்சுவேலியில் உள்ள அவருடைய வீட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இறைபதமடைந்த விஜயநாதனின் இறுதிச் சடங்குகள் அன்னாருடைய இல்லத்தில் இன்றைய தினமே இடம்பெற்றது.
அழிந்து வரும் தமிழர்களின் தொட்டுனர முடியாத மரபுரிமைகளினுள் ஒன்றான வில்லிசைக் கலையினை நிலைநிறுத்திய கலைஞர்களுள் சின்ன கலைவாணர் சின்னமனியுடன் இணைந்து விஜயநாதன், ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் பல அரங்குகள் மூலமாக மக்களின் மனம் கவர்ந்த கலைஞராகவும் நகைச்சுவையுடன் இணைந்து இலகுவாக சமூகத்திற்கு செய்தியை எடுத்துசொல்லும் கலைஞராகவும் நெறியாளர் ஆகவும் நாடகம் வில்லிசையென எண்ணிலடங்காத அரங்குகளில் தனது கலைத்திறனை வெளிப்படுத்தி இருந்தார்.