ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலுக்கு தமிழ்நாடு அரசு சிறந்த நாவல் நூலுக்கான பரிசை அறிவித்துள்ளது.
இன்று மாலை, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும், தமிழ்நாடு அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசினை, டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வெளியீட்டில், ‘பயங்கரவாதி’ நாவலுக்கு வழங்கப்பட உள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவத் தலைவன் ஒருவரின் காதலையும் வீரத்தையும் பேசும் பயங்கரவாதி நாவல் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளின் நியாயங்களையும் அறங்களையும் நுணுக்கமான வகையில் பதிவு செய்துள்ளது.
ஈழத்தில் இருந்து எழுதப்பட்ட நாவல் இலக்கியம் ஒன்றுக்கு தமிழ்நாடு அரசு பரிசை அறிவித்திருப்பது இதுவே முதற்தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.