5
தமிழ்நாடு அரசினால் ஈழத் தமிழ் அறிஞர் ஒருவருக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் தற்போது பிரித்தானியாவில் வசித்து வருபவருமான திரு சிவாப்பிள்ளை கணபதிப்பிள்ளை என்பவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த மொழிபெயர்ப்பு விருதினை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் கையெழுத்துடன் இந்த விருதுரை வழங்கப்பட்டுள்ளதுடன் 2 இலட்சம் ரூபா விருதுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.