கங்காரு தேசத்தில் குடிகொண்ட கந்தப்பனுக்காக…
சிட்னியிலே கோவில் கொண்ட சிங்கார வேலவனே
சிந்தையிலே நிறைந்து நிற்கும் சிவனாரின் பாலகனே
எட்ட நின்று கை தொழுது கூப்புகின்றேன்
என் எண்ணமதில் குடிகொண்ட வேலவனே
அழகா குமரா சிட்னியின் முருகா
அழகா குமரா சிட்னியின் முருகா
சீரான வாழ்வு தரும் ஆறுமுக வேலவரே
சித்திரக் கோயில் கொண்ட சிட்னியின் மூலவரே
பாராண்ட தமிழரினம் பக்கங்களாய் பிரிகையிலே
பாது காவலனாய் புலம்பெயர்ந்த வேலய்யனே
அழகா குமரா சிட்னியின் முருகா
அழகா குமரா சிட்னியின் முருகா
கங்காரு தேசத்திலே வாழும் எங்கள் கந்தையா
கதி என்று வந்தோரை கை விடாத குமரையா
வைகாசி குன்றிலே குடி கொண்ட வேல் ஐயா
வையத்தில் நாம் வாழ அருள்கின்ற முருகையா
அழகா குமரா சிட்னியின் முருகா
அழகா குமரா சிட்னியின் முருகா
இணுவையூர் மயூரன்