0
கதலைகொள்ளாது
தறிகெடச் சுழலும்
எண்ணங்களின் வேகத்தை
மட்டுறுத்தும் பித்தான்
இங்கெங்கோதான்
இருக்கிறது ,
இருளில்
கைக்குத் தட்டுப்படவில்லை .
இருப்பு கொள்ளாமல்
படபடக்கும் நினைவின்
பழைய பக்கங்கள்
பறந்து கிழிந்துவிடாதிருக்க ,
கனக்கும்
கண்ணீரின் துளியொன்றை
எடுத்து வைக்கிறேன்
எடைக் கல்லென .
க. மோகனரங்கன்