பல நாள் கழித்து
ஊர் திரும்பும் பறவையின்
நினைவில் வந்தமர்கின்றன
மழையில் நனைந்து போயிருக்கும்
அஞ்சலிச் சுவரொட்டிகளும்
நினைவில் கலைய
மறுக்கும் விசேஷ உருவங்களும் ..
சர்க்கரை பூசணிகளின்
தலைபிளக்கப்பட்டு பூசப்பட்ட
குங்குமக் குருதியில்
அச்சம் பரவி
அலைகிறது தெருவெங்கும்
பலி பற்றிய பயத்தில்
இருளில் ஒடுங்கிப் போயிருக்கிறது ஊர் முழுவதும்..
ஊர் முழுக்க அலைந்து
திரியும் ஆவிக் கதைகளை
மறந்து விட்ட பறவை
மரணத்துக்கு பிறகான
தன் வாழ்வை பற்றிய
கனவில் உதிர்ந்து எறிகிறது
அன்றைய நாளின் கணக்கை…
வில்லரசன்