ஆகாயம் அழகாய் அந்தியில் தூவுது
வெண்பனி எங்கும் வீதியில் பூக்குது
ஆயிரம் பறவை பாடுத்தோர் கவிதை
அழகிய மலர் ஒன்று விரிகிறது
அருகினில் மழை வந்து சிரிக்கிறது
அங்கங்கே பனித்துளி பொழிகிறது
வெண்மையாய் காலை விடிகிறது
அந்த மல்லிகைப் பூக்கள் போல் பூக்கிறது
வெள்ளைத் தேவதைகள் வீதி எங்கும் நடனம்
வெண் பனியாக மெல்லிய தூறல்
பூவினில் துளியாய் எழுதுதோர் கவிதை
வந்திருந்தோர் குயில் கூவுது காலை
அழகிய காலையில் பனி மழை பொழியுது
ஆயிரம் வெண்புறா சிரிப்பொலி கேட்குது
காதலின் மொழியினில் சலங்கைள் பாடவே
கனவினில் என் மனம் கவிதைகள் வரையுது
பனி விழும் மலைகளும் நதி சொல்லும் கதைகளும்
அழகிய முலைகளாய் அது பெரும் அழகு
காலங்கள் எழுதும் ஒரு கவிதையின் தொடர்களாய்
வெண் முகில் கூந்தலாய் வட துருவப் பெண் இவள் நடனமாய்
அருகினில் வந்து எனை எழுப்புதோர் தென்றல்
சல சல வென்றொரு மழைத்துளி தூவுது
கடும் குழிரோடொரு காலையும் விடியுது
எங்கிருந்தோ ஒரு இசை மழை பொழியுது
வட துருவ வெண்நிலவு வா என்று அழைக்குதெனை.
பா.உதயன்