0
அதிகாலை போர்வை விலக்கி
ஒற்றை சூரியனாய் உன்
அழகுச் சோம்பல் உதிக்கிறது
ஒற்றை சூரியனாய் உன்
அழகுச் சோம்பல் உதிக்கிறது
உதட்டு கூண்டில் அடைபட்டிருந்த
முத்த பறவை சிறகசைத்து பறக்கிறது.
வெட்கம் பரவும் உன் பெரும் வெளிதனில்
நீண்டு முளைவிடுகிறது
ஆசைத்தாவரம்.
பூத்துக் குலுங்கிவரும் ஆர்வம்
காலையில் பெய்யும் -நின்
அழகு மீட்டல்
அடைமழைக்கு மத்தியில்,
மீண்டும் மீண்டும் உதட்டில்
ஒரு புன் சிரிப்பை
உடனே தயாரித்து கொண்டு வருவதற்குள்,
நேற்று ஒளிச்சேர்க்கை செய்த இரவில்
ஒரு மல்லிகை பூத்திருந்ததை
நான் இப்பொழுது யாருக்கும் சொல்லப்போவதில்லை.
–செல்வை–