விழி கோர்க்கும் நன்னிசி நேர
உன் இமைகோர்க்கும் பொழுதுகளும்
ஒரு சாளரம்
தாலாட்டும் பால்நிலா ஒளியில்
உன் கரங்களோரம் உரசிடும்
அவன் தேகம்
அவன் தேகம் தொடும் தூரம்
சிலிர்த்திடும் உன் பொன்மான் மேனி
வர்ணங்கள் பூசித்த தேகமும்
ஒன்றால் இணைத்திடுமாம்
அந்நேரம்
காரிருள் அகற்றிய பொன்வானமும்
தேன்நிலவாய் தேகமருவிடும்
சில்லென்று தூரிய செங்காற்றும்
கலவியெனும் கானம் பாடும்
செல்களை துறந்து ஊசலாடிய
உணர்வுகளும் ஒருகணம்
திமிருமே உன்கருவிழியோரம்
ஓடிய காலமும் தேடிய வாழ்க்கையும்
ஒரு இரவினில்
பனி விழும் மலர்வணமாய்!
கேசுதன்