0
…………………………
வானம் இருண்டிருண்ட
ஓர் நாளில் நாம்
உரையாடத் தொடங்கினோம்..
மலைகள், நதிகள்
தொலைந்தவை,
தொலைக்காதவை
எல்லாவற்றையும்
தேடும் பறவையாய்
நம் சொற்கள் அலைந்தன…
நிமிடங்கள் கழிந்தன,
மணித்தியாலங்கள் கரைந்தன
நம்மையறியாமல் புன்னகைத்தன வார்த்தைகள்..
வெளியே வந்தேன்!
இப்போது
வானம் நட்சத்திரங்களால்
சூழப்பட்டிருந்தது.
அவற்றுக்கிடையில் புன்னகைத்துக்கொண்டிருந்து
ஓர் நிலா…
அதியமான்