புரட்சிக் கீதங்களிசைக்கும்
ஆங்கே சிவப்பு
மஞ்சள்க் கொடிகள் பிறக்கும்
புதிதாக தென்னைகள் பூக்கும்
ஈழ நிலம் புனிதர்களைத் தேடும்
இது போலொரு கார்த்திகை நாளில்
கல்லறைகள் கண் திறக்கும்
விரலிடுக்கில் வேட்கை பூக்கும்
சமர்க்கதைகள் வந்து போகும்
இறுதிக்கையசைப்பு கண்ணீராகும்
வெடியோசை பேரிகையாகும்
இது போலொரு கார்த்திகை நாளில்
தீபங்கள் பூக்களாக
பூக்களைத் தேடிக் கைகள் அலையும்
ஆக்களின் உயிர்கள் அடங்கும் அமைதியில்
தாயகக் கனவுடன் கானமிசைக்கும்
இசைத்திடும் பொழுதொன்றில்
மெல்லன நீவி வானுமும் அழும்
இது பொலொரு கார்த்திகை நாளில்.
த. செல்வா