0
ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு விதமான கலாச்சாரங்களும், பண்பாடுகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இது அவர்களின் முன்னோர்கள் வழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவுப் பழக்கம் முதல் உடை அணியும் முறை வரை… இப்படி எல்லாமே ஒவ்வொரு நாட்டிலும் தனிச் சிறப்புப் பெற்றிருக்கும். அந்த வகையில் மருத்துவத்திலும் இதே தனித்துவம் தான்.
இந்தியர்கள் எப்படி ஆயுர்வேதம், சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம் போன்றவற்றைக் கடைப்பிடிக்கிறார்களோ, அதே போன்று மற்ற நாட்டினரும் பல்வேறு மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். நம் உடலில் ஏற்பட்டுள்ள எல்லா வித வலிகளையும் சட்டென்று போக்கும் ஆற்றல் சீனர்களின் புது வித ஐஸ்கட்டி மருத்துவத்தில் உள்ளதாம்.
சீன மருத்துவம்!
இந்த புதுவித ஐஸ்கட்டி மருத்துவத்தின் பெயர் ‘Feng Fu’ என்று சீனர்கள் அழைப்பார்களாம். இது குறிப்பாக கழுத்து மற்றும் மூட்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வலிகளுக்கான மருத்துவ முறையின் பெயராம். இதற்கென்று பெரிய அளவில் செலவு எதுவும் தேவையில்லை. வெறும் ஐஸ்கட்டிகள் மற்றும் சில ஜிப்லாக் பைகள் போதும்.
கழுத்து வலிகளுக்கு!
மொபைல் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை இப்போதெல்லாம் அதிகம் பயன்படுத்துவதால், கழுத்தின் தண்டுவடம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனைச் சரி செய்ய, ஒரு ஜிப்லாக் (ஜிப் கொண்ட பொலிதீன் பை) பையில் ஐஸ்கட்டிகளை நிரப்பிக் கொண்டு கழுத்தின் பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கு சிறிது கீழ் வடடத்தில் நன்கு ஒத்தடம் கொடுத்து வரவும், இவ்வாறு வெறும் வயிற்றில் 20 நிமிடம் செய்து வந்தால் கழுத்து வலி பறந்து போய் விடும். மேலும், இதனை தூங்குவதற்கு முன்பும் செய்யலாம்.
தைராய்டு பிரச்சினை!
இன்று அதிகப் படியான நோய்களில் இந்த தைராய்டும் முக்கிய நோயாக உள்ளது. இதனை Feng Fu புள்ளி என சொல்லப்படும். கழுத்து பகுதியில் ஐஸ்கட்டியைக் கொண்டு ஒத்தடம் கொடுத்து வந்தால், விரைவாக நலம் பெறலாம். மேலும் சீரான ரத்த ஓட்டத்தையும் இது ஏற்படுத்தும்.
மாதவிடாய் வலிகளுக்கு..
பெண்களுக்கு மாதவிடாயின் போது மிக மோசமான வலி ஏற்படும். இதனையும் இந்த சீனர்களின் ‘Feng Fu’ மருத்துவம் சரி செய்து விடுமாம். வெறும் ஐஸ்கட்டிகளை நிரப்பிய ஜிப்லாக் பையை மட்டும் வலி உள்ள இடத்தில் வைத்து எடுத்தால் நலம் பெறலாம்.
மூட்டு வலிகளுக்கு..
வயதாகாமலே வரும் நோய்களில் மூட்டு வழியும் ஒன்று. மூட்டு வலியால் இன்று பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் அவதிப்படுகின்றனர். இந்த மூட்டு வலிகளைச் சரி செய்ய ‘Feng Fu’ புள்ளியில் ஐஸ்கட்டிகளை வைத்து எடுத்தால் விரைவில் குணமடையலாம்.
தலைவலியை விரட்ட..
இந்த சீனர்களின் மருத்துவம் தலைவலியைக் குணப்படுத்த பெரிதும் உதவும். குறிப்பாக இவை மற்ற மருத்துவங்களைக் காட்டிலும் அருமையான தீர்வை நமக்குத் தரும். இந்த ‘Feng Fu’ முறையைப் பின்பற்றி கழுத்து பகுதிக்கும் மண்டையின் எலும்பிற்கும் சிறிது கீழ் வட்டத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தாலே இவை சட்டென சரியாகும்.
தூக்கமின்மைக்கு..
தூக்கமில்லாமல் அவதிப்படுவோருக்கு எளிய வழி முறை இருக்கிறது. ‘Feng Fu புள்ளி’ என்று சொல்லப்படும் இடத்தில் ஐஸ்கட்டியை வைத்துக் கொண்டு மெல்ல ஒத்தடம் கொடுத்து எடுத்தால் நன்றாக தூக்கம் வருமாம். மேலும், மனம் நிம்மதியும் அடையுமாம்.
அடிக்கடி சளி பிடிக்குதா?
பலருக்கு அடிக்கடி ஜலதோஷம் அல்லது சளி பிடித்துக் கொள்ளும். சீனர்களின் இந்த வைத்திய முறை அடிக்கடி சளி பிடித்துக் கொள்வோருக்கு தீர்வை தருகிறதாம். அத்துடன் இவை மூக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் குணப்படுத்துமாம்.
தொடை தடிப்புகளுக்கு..
பொதுவாக இந்தப் பிரச்சினை பெண்களுக்கே அதிகம் ஏற்படும். அதாவது, தொடைகளில் அதிக அளவில் கொழுப்புகள் சேர்வதால் சதைகள் சேர்வது போல ஏற்படும். இதனையும் ‘Feng Fu’ முறை குணப்படுத்தும். மெல்ல மெல்ல இந்த தடிப்பை இது குறைக்க கூடும்.
மன அழுத்தத்தைப் போக்க..
இந்த ‘Feng Fu’ என்ற அற்புத சீனர்களின் முறையை நீங்கள் பின்பற்றி வந்தால், மன அழுத்தத்தால் அவதிப்படுவோருக்கு நல்ல தீர்வை இவை தரும். அத்துடன் மூளை, தண்டுவடம், ரத்த ஓட்டம் ஆகியவற்றை இலகுவாக வைத்துக் கொள்ளும்.
எப்போது ‘Feng Fu’ முறையை செய்யலாம்?
இந்த ‘Feng Fu’ முறையை தினமும் இரு வேளையில் செய்து வரலாம். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றிலும், இரவில் தூக்குவதற்கு முன்பும் இதனை செய்யலாம். மேலும், ஒத்தடத்தை 30 வினாடிகள் விட்டு விட்டு கொடுக்கவும்.
நன்றி – boldsky