புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் குழந்தை உள்ளவர் கவனத்திற்கு!

குழந்தை உள்ளவர் கவனத்திற்கு!

2 minutes read

”கற்பூரம்….அதிக அளவில் கவனம் தேவை…… “நண்பரின் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ரோலர்கோஸ்டர்’ போலமாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது
என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:

“வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம்.அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டுகற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை
வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.

‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’-என்று மனைவி கூகுளில் பார்த்துதெரிவித்த அடுத்த நிமிடமே, என்மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது.

அது நான்கு நிமிடம் நீடித்தது.உடனே ஆம்புலன்ஸ் 108 உதவிக்கேட்டேன். அவர்கள் வந்தபோது,
இழுப்பு சரியாகிவிட்டது.முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தைதூங்கினால் எல்லாம்சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.

ஆனால், மீண்டும் கண்கள் செருகஆரம்பித்துவிட்டன. உடனே’எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.

கற்பூரத்திலிருக்கும்கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப்பொருள் கடுமையானபாதிப்புகளை உருவாக்கக்கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்)
மூலம் அறிந்த எமர்ஜென்ஸிமருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்தசிகிச்சையில்இறங்கினார்கள்.

அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசிகுத்தும் போது குழந்தை எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாததுஎங்களுக்கு அடிவயிற்றைக்கலக்கியது. அதாவது அவன்சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன்மோடு’க்குசென்றுவிட்டிருந்தான்.உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல்சென்டரின்’ குழந்தை நல அவசரசிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ்ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.

ஆம்புலன்ஸில் இருந்துஇறங்கும்போது “அப்பா!” – என்றுஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும்
அது எனக்குத் தெம்பூட்டதைரியமானேன்.கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப்பொருளின் மூன்றாம் நிலைகோமாவுக்கு கொண்டுசென்றுவிடும்.

அதை என் மகன்குறைந்த அளவு சாப்பிட்டதால்கோமா நிலைக்கு செல்லாமல்தப்பித்துவிட்டான். இது ஒருவிதமானஅதிஷ்டமேயானாலும் அதுஎல்லோருக்கும் வாய்ப்பதில்லை.தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனேசிகிச்சைக்கு கொண்டுசென்றதாலும் இறையருளால் எங்கள்
கண்மணியை எங்களால் காக்கமுடிந்தது.

அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப்போராட்டத்துக்குப் பின்தான்அதுவும் சாத்தியமாயிற்று!”கேட்டீர்களா… விபரீதத்தை?அதனால், கற்பூரம் வீட்டில் குழந்தைகளுக்கு
எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள்.அப்படி குழந்தைகள் ஏதாவதுசாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்..உடனே தாமதிக்காமல் தகுந்தமருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

பகிருங்கள் எங்கேனும் ஒர் குழந்தை காப்பாற்றபடலாம்…
குழந்தை உள்ள அனைத்து தரப்பு மக்களும்…. மிக மிக கவனமாக இருக்க வேண்டும்…….

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More