செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் மார்பக புற்று நோய் என்றால் என்ன?

மார்பக புற்று நோய் என்றால் என்ன?

2 minutes read

மார்பக வலி வந்தாலே அது மார்பக புற்றுநோய் தான் என்னும் சுய முடிவுக்கு வந்து பயந்து விடும் பெண்கள் மனரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால் மார்பு வலி எல்லாம் மார்பக புற்றுநோய் அல்ல. மார்பக புற்றுநோய் என்பது மார்பகத்தில் கட்டிகளை உண்டாக்கும். மிக முக்கியமாக அவை எந்தவிதமான வலிகளையும் உண்டாக்காது.

அதனால் மார்பு வலி வரும் போது வேறு என்னமாதிரியான அறிகுறிகள், அசெளகரியங்களை உணர்கிறீர்கள் என்பதை மட்டும் கவனியுங்கள். அதே நேரம் இந்த வலி தொடர்ந்து இருக்காது. ஒரு சைக்கிள் சுழற்சி போல் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் வந்துபோகும். சிலருக்கு மாதவிடாய் காலங்களுக்கு முன்பு அல்லது பின்பு வரும். இவை ஹார்மோன் சம்பந்தபட்ட பிரச்ச னையாகதான் பெரும்பாலும் இருக்கும்.

​காரணங்கள் என்னென்ன

ஹார்மோன் மாற்றங்களால் தான் இந்த மார்பு வலி உண்டாகிறது. இவை தவிர பெண்கள் கருத்த டை மாத்திரைகள் , சாதனங்களை பயோகப்படுத்தும் போது இந்த ஹார்மோன் பிரச்சனை வருவ தற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இன்றும் மேல் நாடுகள் போல் இந்தியாவிலும் பெண்கள் புகை, மது பழக்கத்துக்கு ஆளாகிறார்கள்.

ஆய்வின் படி புகை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு இந்த ஹார்மோன் பிரச்சனை உண்டாகி றது. இவர்கள் தவிர அதிகப்படியான மன உளைச்சலுக்கு உள்ளான பெண்களுக்கும் இந்த ஹார் மோன் மாற்றம் உண்டாகிறது. வெகு சிலருக்கு மார்பு காம்புகளில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால் உண்டாகும். இன்னும் சிலருக்கு தசை வலியால் மார்பு வலி உண்டாகும். இதற்கு காரணம் சரியான உள்ளாடைகள் அணியாததே. இவர்களை முழுமையாக பரிசோதனை செய்வதன் மூலம் வலிக்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள் மருத்துவர்கள்.

​எப்படி சரி செய்வது

உணவு கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் வைட்டமின் சத்துகள் நிறைந்த மாத்திரைகளும் எடுத்து கொள்வதன் மூலம் மார்பு வலியை சரி செய்ய முடியும். தற்போது நடுத்தர வயது பெண்கள் அதிகம் பேர் இந்த மார்பு வலிக்கு உள்ளாகிறார்கள்.

முதலில் மார்பு வலியை கண்டு பயப்படாமல் அவை தொடர்ந்து இருக்கும் போது மருத்துவரை அணு குவது நல்லது சுய பரிசோதனை, மேமோகிராம், .ஃபைப்ரோ அடினோமா, ஃபைப்ரொ அடினோசிஸ் போன்ற பரிசோதனைகள் மூலம் மார்பகத்தில் வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை யும் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள். மாத்திரைகள், பிஸியோதெரபி, உடற்பயிற்சி மூலமே இதை எளிதாக சரிசெய்துவிடலாம் என்பதால் பெண்கள் மார்பக வலியை கண்டு அச்சப்பட தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

​தவிர்க்க முடியுமா

மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வயிறு வலியாக இருக்கட்டும் வேறு பல உபாதைகளாக இருக் கட்டும் இவை எல்லாமே இயல்பானவை. ஆனால் இதை தீவிரமாக்காமல் கட்டுப்படுத்த முடி யும். சைவ உணவு வகைகள் அதிகம் எடுத்துகொள்பவர்கள், கொழுப்பு நிறைந்த உணவு எடுத்து கொள்பவர்கள், மது புகை பழக்கம் இருக்கும் பெண்கள் இதைத் தவிர்ப்பதன் மூலம் இந்த மார்பு வலியை எளிதாக தவிர்க்கலாம்.

உணவு பழக்கங்களில் மாற்றங்களை கடைபிடிப்பதோடு வாரத்துக்கு மூன்று நாள் உடற்பயிற்சி செய்வதும் கூட இந்த பிரச்சனையை அதிகரிக்காமல் தடுக்கும். பூப்படைந்த பெண்கள் உள்ளாடை அணியும் போது அதிக கவனம் எடுத்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ஆலோசனை எடுத்து கொள்வதும் நல்லது.

இவையெல்லாம் செய்தாலே மார்பு வலி பிரச்சனை அதிகரிக்காமல் பார்த்துகொள்ளலாம் என்கி றார்கள் மருத்துவர்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More