கொலஸ்ட்ராலை குறைக்க
ஓட்ஸ் உண்பதால் லிப்பிட் கொழுப்பை குறைக்கும் நன்மைகள் உள்ளது. மேலும் அவெனாந்த்ரமைட் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஓட்ஸில் உள்ளதால் LDL விஷத்தன்மைக்கு எதிராக செயல்பட்டு பாதுகாக்கும்.
இதயக்கோளாறு
மாரடைப்பு ஏற்பட காரணமாக இருக்கும் “தமனித்” தடிப்பை உண்டாக்கும், மேலும் உடலில் விஷத்தன்மை அழுத்தம் மற்றும் அழற்சியையும் ஏற்படுத்தக்கூடும், அப்படியிருக்கையில் இந்த ஓட்ஸை உண்டு வந்தால் இதயம் சீராக விளங்கி வருவதை காணலாம்.
உடல் பருமன்
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கூட தங்களது அடிவயிற்று பாகத்தை குறைக்க சிரமமாக இருக்கும். ஓட்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்டுள்ளதால் எளிதாக அடிவயிற்று பகுதியை குறைக்கலாம். சுவைமணம் இல்லாத ஓட்ஸே வயிற்றை அதிகமாக நிறையச்செய்கிறது என ஆராய்ச்சியாளர்களும் தங்களது கருத்தை கூறியுள்ளனர்.
சர்க்கரை அளவு
இரத்த கொதிப்பை குறைப்பதுடன், இரத்ததில் உள்ள சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது. ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் இரத்த உறைக்கட்டி ஏற்படுவதை குறைப்பதால், இரத்த ஓட்டம் அதிகரித்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.
மார்பக புற்றுநோய்
ஓட்ஸில் லிக்னன்கள் மற்றும் என்ட்ரொலாக்டோன் போன்ற பைட்டோ-ரசாயனங்கள் வளமையாக உள்ளதால் மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. கூடுதலாக, ஓட்ஸ், கம்பு மற்றும் அதே போன்ற இதர உணவுகளில் உள்ள கரையத்தக்க நார்ச்சத்துக்கள் மார்பக புற்று அணுக்களின் மீது நேரடியான தாக்கத்தை கொண்டுள்ளது.
சருமப்பொலிவு
இது தவிர தினசரி ஓட்ஸ் உண்டு வந்தால் உடல் சருமம் பொலிவு பெற்று, சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும். இதென்ன ஓட்ஸ் குளியல் மேற்கொண்டால் அரிப்பு, சருமம் சிவத்தல், சரும எரிச்சல் போன்றவைகள் நீங்கும்.
மன அழுத்தம்
மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த ஓட்ஸின் பங்கு மிக அதிகம், செரோடோனின் என்ற நரம்பிய கடத்துகையின் உற்பத்தியை அதிகரிக்க மூளையை இது தூண்டி விடும். இதுவே உங்கள் மனநிலை, தூக்கம் மற்றும் பசியை கட்டுப்படுத்துவதாகும், கூடுதலாக தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும் மெக்னீசியம் நிறைந்துள்ளது.