நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் ஆரோக்கியமானது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை ஒன்றாக சேர்த்து உண்ணுகின்றோம். ஆனால் நாம் இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நாம் பல நோய்களுக்கு உள்ளாகுகின்றோம்.
இதேவேளை நாம் பலவிதமான பழங்களை ஒன்றாக கலந்து சாப்பிடுது ஆரோக்கியமற்ற ஒரு செயல் மட்டுமில்லாமல் சில நேரம் இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் மிகப் பெரிய அபாயத்தையும் உண்டாகுகின்றது என்று சொல்லப்படுகின்றது.
நாம் என்றுமே சேர்த்து சாப்பிடக் கூடாத சில பழக் கலவை பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.
கேரட் மற்றும் ஆரஞ்சு
கேரட் மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உண்டாகலாம்.
எலுமிச்சை மற்றும் பப்பாளி
எலுமிச்சை மற்றும் பப்பாளியை ஒருபோதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது. இதனை சேர்த்து சாப்பிடுவதால், இரத்த சோகை மற்றும் ஹீமோக்ளோபின் சமச்சீரின்மை ஆகிவை உண்டாகின்றன. மேலும் இது குழந்தைகளுக்கு அதிக தீங்கை உண்டாக்குவதாக உள்ளது.
பால் மற்றும் ஆரஞ்சு
பால் மற்றும் பால் சேர்த்த உணவை உட்கொள்ளும்போது அதில் ஆரஞ்சு பழத்தை சேர்ப்பதால், அந்தப் பழத்தில் உள்ள அமிலம் , உணவின் செரிமானத்திற்கு பொறுப்பாக இருக்கும் ஸ்டார்ச்சை முற்றிலும் அழித்து விடுகிறது. ஆகவே பால் கலந்த உணவில் ஆரஞ்சு பழத்தை சேர்ப்பதால் எளிதில் அஜீரண கோளாறு எற்படுகின்றது. இதனால் இதை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.
கொய்யா மற்றும் வாழை
கொய்யா மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக உட்கொள்வதால் அமில நோய் , குமட்டல், வாய்வு தொந்தரவு மற்றும் தொடர்ச்சியான தலைவலி போன்றவை உண்டாகின்றன.
காய்கறிகள் மற்றும் பழங்கள்
காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து சாப்பிடுவதால் பழங்களில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால், ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். இவை அதிக நேரம் வயிற்றில் இருப்பதால் வயிற்றில் இவை புளித்துப் போவதால் நச்சுகளை வெளியிடுகின்றன. இதனால் வயிற்றுப்போக்கு, தலைவலி, தொற்று பாதிப்பு, மற்றும் வயிற்று வலி போன்றவை உண்டாகின்றன.
அன்னாசி மற்றும் பால்
அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமிலைன் என்னும் கூறு பாலுடன் இணைவதால் வாய்வு, குமட்டல், தொற்று பாதிப்பு , தலைவலி, வயிற்றுவலி போன்றவை உண்டாவதால் இதனை சேர்த்து சாப்பிடுவது ஆபத்தாகும்.
வாழைப்பழம் மற்றும் புட்டிங்
வாழைப்பழத்துடன் புட்டிங் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் கடினமாகி, நச்சு உற்பத்தியை உடலில் ஊக்குவிக்குவிப்பதால் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு உண்டாகிறது.