உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு நுரையீரலாகும். மேலும் இவை புகைப்பிடிப்பது, காற்று மாசுபாடு போன்ற பல்வேறு காரணங்களால் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயுடன், வேறு சில நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, காச நோய், எம்பிஸிமா போன்றவைகளாலும் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் நுரையீரலில் பிரச்சனை உள்ளது என்பதை வெளிகாட்டும் முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை காண்போம்.
தொடர் இருமல்
சுவாச பாதையில் எரிச்சலூட்டுபவைகள் மற்றும் சளிகள் இருந்தால் அவற்றை வெளியேற்றுவதற்காக வருபவை தான் இருமல்.
இந்த இருமலானது ஒருவருக்கு பல நாட்களாக இருந்தால் நுரையீரல் முறையாக செயல்படுவதில்லை என்று அர்த்தம்.
மூச்சுத் திணறல்
அன்றாட வேலைகளை செய்யும் போது ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் அவரின் நுரையீரலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
மூச்சுத்திணறலானது மூச்சுக்குழாயில் ஏற்படும் சில வகையான அடைப்புக்களாலும் ஏற்படலாம்.
அதிக சளி
சளியானது கிருமிகள், அழுக்குகள், தூசிகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு நுரையீரலினுள் செல்ல உதவி புரியும்.
சளியானது மஞ்சள், பச்சை அல்லது இரத்தம் கலந்து வெளியேறினால் நுரையீரலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும்.
கால் வீக்கம்
பாதம் மற்றும் கால்களில் வீக்கம், வலி இருந்தால் அதுவும் நுரையீரலில் உள்ள பிரச்சனைக்கான அறிகுறிகளில் ஒன்றாகும்.
தலைவலி
நுரையீரல் பிரச்சனைகளுள் ஒன்றான நாள்பட்ட நுரையீரல் நோய் இருந்தால் காலையில் எழுந்ததும் திடீரென்று தலைவலி அல்லது தலைச்சுற்றல் ஏற்படும்.
உடல் சோர்வு
தூங்கி எழுந்த பின்னரும் மிகுதியான சோர்வு அல்லது அதிகப்படியான களைப்பை உணர்ந்தால் நமது உடலில் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம். அது நுரையீரலில் பிரச்சனையாக இருக்கவும் வாய்ப்புள்ளது.